முன்பக்க சக்கரம் செயலிழந்து தரையிறங்கிய விமானம்...

top-news
FREE WEBSITE AD

இஸ்தான்புல் விமான நிலையத்தில் போயிங் 767 விமானம் ஒன்று முன்பக்க தரையிறங்கும் கருவி இல்லாமல் தரையிறங்கும் பயங்கரமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பாரிஸிலிருந்து இஸ்தான்புல் நகருக்குச் சென்ற சரக்கு விமானத்தின் முன்பக்க தரையிறங்கும் கருவி செயலிழந்த காரணத்தால், பின்பக்க கியர் மற்றும் சக்கரங்களை கொண்டு விமானம் தரையிறக்கப்பட்டது.

ஃபெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு சொந்தமான போயிங் 767 சரக்கு விமானத்தின், முன்பக்க கியர் செயலிழந்து தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டது. அதனால் விமானி இஸ்தான்புல் விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தையடுத்து ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. துருக்கியின் போக்குவரத்து அமைச்சகத்தின் வெளியிட்ட தகவல்களின்படி, இந்த விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரக்கு விமானம் முன்பக்க சக்கரங்களை பயன்படுத்தாமல் தரையிறங்கியதால் விமானத்தின் முன்பகுதி தரையுடன் மோதி தீப்பொறி பறந்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *