அன்வாருக்கு பாதுகாப்புக்குச் சென்ற காவலர் விபத்தில் சிக்கினார்!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஜூலை 30: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று  பெர்சியாரான் மேரு ராயா 3, பண்டார் மேரு ராயாவில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பாதுகாப்புக்குச் சென்ற போக்குவரத்து காவலர்  ஒருவர் விபத்தில் சிக்கி காயமுற்றார்.

காலை 10.15 மணியளவில், மாநில போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த லான்ஸ் கார்ப்ரல் முகமட் ஃபைசோல் டெராமன் என்ற அக்காவலர் திடீரென நின்ற வாகனத்தின் பின்புறத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது, ​​அன்வார், மேருவில் உள்ள கேசுவரினா  ஹோட்டலுக்கு இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரீகம் தொடர்பான 7வது உலக மாநாட்டிற்கு (WCIT 2024) சென்று கொண்டிருந்தார்.

சாலையில் இருந்த பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ், பாதிக்கப்பட்டவருக்கு அவசர உதவி வழங்க உடனடியாக நிறுத்தினார்.

பேராக் காவல்துறையின் முகநூல் பக்கத்தில் ஓர் அறிக்கையின்படி, போக்குவரத்து காவலர் மேல் சிகிச்சைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றும், மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை நேரில் பார்த்த அன்வார், தனது அனுதாபத்தை வெளிப்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் சுமையைக் குறைக்க நன்கொடை அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *