அடித்த அடியில் கணவனின் மூளை வெளியில்! கொலை செய்த மனைவி சிறையில்!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் கான்பூரில் கடந்த 2 நாட்களாகவே ஒரு சம்பவம் பேரதிர்ச்சியை இணையத்தில் தந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான காணொளியும் இணையவாசிகளை உறைய வைத்து வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ளது ஹதுடா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சத்பால்.. இவருக்கு 45 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் காயத்ரி தேவி.. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.

கல்யாணமானதில் இருந்தே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.. இதனால், அடிக்கடி இருவருமே தகராறு செய்து கொள்வார்களாம். சிலசமயங்களில் மனைவியின் உச்சக்கட்ட டார்ச்சரால் ஆத்திரமடையும் சத்பால், திடீரென கடுமையாக அவரை தாக்கிவிடுவாராம். இதெல்லாம் அக்கம்பக்கத்து வீட்டினர்களுக்கு தெரியும். ஆனாலும் தம்பதியினரை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, மதியம் ஆட்டுக்கறி வாங்குவதற்காக ரூ. 300 தரும்படி மனைவி காயத்ரியிடம் கேட்டாராம் சத்பால்.. ஆனால் 300 ரூபாயை கொடுப்பதற்கு காயத்ரி மறுத்துவிட்டாராம்.. இதனால் இருவருக்கும் வாக்குவாதமும் முற்றி சண்டையும் வந்துள்ளது.. வழக்கம்போல், காயத்ரியை சத்பால் கடுமையாக தாக்கியுள்ளார்...

இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி சத்பாலை தரதரவென வீட்டிற்கு உள்ளிருந்து வெளியே இழுத்து வந்து தள்ளியுள்ளார்.கீழே கிடந்த செங்கல்லை எடுத்து வந்து, கணவனின் மார்பு மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அவரது தலையிலேயே கடுமையாக தாக்கினார். இதில் சத்பாலின் மண்டை உடைந்தது. அப்போதும் விடாமல் செங்கல்லால் கணவரின் தலையை நசுக்கனார். இதில் காயத்ரி கண்ணெதிரே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தால் சத்பால் உயிரிழந்தார்.

இதற்கு பிறகு எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், காயத்ரி வீட்டிற்குள் சென்றுவிட்டார்.. இந்த தாக்குதல் சம்பவத்தை, அந்த பகுதி மக்கள் அனைவருமே அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டே நின்றார்கள்.. ஆனால், யாருமே சத்பாலை காப்பாற்ற முன்வரவில்லை.. மாறாக செல்போனில் வீடியோவாகவும் எடுத்தனர்.. இது தொடர்பான காணொளி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயத்ரியை கைது செய்ததுடன் சத்யபாலுவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போது காயத்ரியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயத்ரி சைவ உணவை சாப்பிடுபவர்.. ஆனால், சத்யபால் இறைச்சி பிரியராம்.. அத்துடன் மதுபோதைக்கும் அடிமையானவர்.. சிக்கன், மட்டன் செய்து தர வேண்டும் என்று அடிக்கடி காயத்ரியை கேட்டு தொந்தரவு செய்வாராம். சம்பவத்தன்றும், மட்டன் சாப்பிட ஆசைப்பட்டு 300 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால், அன்றைய தினம் நிஜமாகவே காயத்ரியிடம் பணம் இல்லையாம்.

பணம் இல்லை என்று சொல்லியும், தகராறு செய்தாராம் சத்யபால். காயத்ரி செங்கல்லால், தாக்க தொடங்கியதுமே, சத்ய பால் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவரது மார்பிலேயே காயத்ரி ஏறி உட்கார்ந்து கொண்டதால், சத்யபாலால் தப்பி செல்ல முடியவில்லை.. தலையில் செங்கல்லால் நசுக்கி கொண்டேயிருந்ததில், சத்யபாலின் மூளையே வெளியே வந்துவிட்டதாம்.. ஆனால், காயத்ரி அப்போதும் நிறுத்தவில்லை.. கணவனின் உயிர்பிரியும் வரை செங்கல்லாலேயே தாக்கியிருக்கிறார்.

அடிக்கடி மட்டன் செய்வதில்தான் தம்பதிக்குள் தகராறு வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் காயத்ரியை கடுமையாக தாக்கி வந்திருக்கிறார் சத்யபால். இதில் கடுமையான உளவியல் பாதிப்புக்கு ஆளாகிவிட்டாராம் காயத்ரி.. சில நாட்களுக்கு முன்பு மனநோய்க்கான சிகிச்சையையும் காயத்ரி பெற்று வந்ததாகவும், இன்னும் மனநிலை சரியாகவில்லை என்றும் காயத்ரியின் அம்மா கண்ணீருடன் சொல்கிறார்...


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *