நேர்மை விவகாரத்தில் முறைகேடு அதிகாரிகளிடம் குடிநுழைவுத் துறை விட்டுக் கொடுத்துப் போகாது!
- Muthu Kumar
- 10 Oct, 2024
கோலாலம்பூர், அக்.10-
மருத்துவ விசா கும்பலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சிலர் மீதான விசாரணையை அமலாக்க நிறுவன நேர்மை ஆணையத்திடம் (இஏஐசி) குடிநுழைவுத் துறை ஒப்படைத்தது. நேர்மை மீறிய குற்றச்சாட்டுத் தொடர்பில் மேல் விசாரணையை மேற்கொள்ள இஏஐசி குடிநுழைவுத் துறை தலைமையகத்திற்கு வந்ததை அத்துறை உறுதிப்படுத்தியதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
இஏஐசி மேற்கொள்ளும் விசாரணை சம்பந்தப்பட்ட ஊடக அறிக்கையைக் குடிநுழைவுத் துறை சரிபார்த்து மேல் விசாரணை மேற்கொள்ள இஏஐசியிடம் ஒப்படைத்து வெளிப்படையான, நியாயமான முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராய் இருக்கிறது.
நேர்மை விவகாரத்தில் முறைகேடு செய்ததாக நிரூபிக்கப்பட்ட எந்த அதிகாரிகளிடத்திலும் குடிநுழைவுத் துறை விட்டுக் கொடுத்துப் போகாது. இதில் பதவி அல்லது பொறுப்பு பேதமின்றிக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஓர் அறிக்கையில் டத்தோ ஸக்காரியா ஷாபான் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *