இரவைப் பகலாக்கிய விண்கல்!
- Muthu Kumar
- 21 May, 2024
இரவை பகலாக்கும் வகையில் நீல ஒளியுடன் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் வானில் ராட்சத விண்கல் கடந்து சென்றதாக கூறப்படும் பல காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளுக்கு இடையேயான வானில் ஒரு நீல விண்கல் கடந்து செல்வது போன்றும், அந்த விண்கல்லிலிருந்து திடீரென ஒளி வந்து இரவை பகல் போன்று பிரகாசித்ததுமான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை வாகனத்தில் சென்ற சிலர் பதிவு செய்த காணொளி வைரலாகி வருகிறது.
பிரகாசமான நீல ஒளி வானத்தில் தெரிந்ததால் இரு நாடுகளிலும் உள்ள மக்கள் நம்பமுடியாத இந்த நிகழ்வை தங்கள் கைத்தொலைபேசிகளில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி காண்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.
விண்கல் ஒளியின் காணொளியை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தாங்கள் வியந்த சம்பவத்தின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கூற்றுப்படி விண்கற்கள் அல்லது விண்வெளிப் பாறைகள் என்பது விண்வெளியில் உள்ள பொருட்களாகும். அவை தூசிகள் முதல் சிறிய சிறுகோள்கள் வரை இருக்கும். இவை அதிக வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றி எரிவதால் விண்கற்கள் என அழைக்கப்படுகின்றன என அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *