அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்ற செய்தி பொய்யானது!

top-news
FREE WEBSITE AD

அதிமுக பாஜக கூட்டணிக்கு முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருபவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த தேர்தலில் தனது தோல்விக்கு காரணமே, அதிமுக பாஜக கூட்டணிதான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். அதனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என வலியுறுத்தி வந்தார்.

ஆனால், அவரது கூற்றுக்கு மாறாக 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உருவாகி உள்ளது. இதற்காக மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (முன்னாள் அதிமுக அமைச்சர்) நியமிப்பட உள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால், கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர், புரட்சி தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்ன்வென்றால் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று இதுவரை கூறவில்லை. அதேபோல் தான் டி.ஜெயக்குமார் விலகியதாக பரவும் செய்தியும் போலியாக எடிட் செய்யப்பட்டது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *