விடிய விடிய மது அருந்திய செங்கல்பட்டு மாணவி உயிரிழப்பு- காரணம் என்ன?

top-news
FREE WEBSITE AD

தஞ்சை மாணவி விவகாரத்தின் அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை. இரவு முழுவதும் மது அருந்திய நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.அவரது மரணத்துக்கான காரணம் குறித்து, தற்போது முதல்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து போலீசார் இம்மரணம் தொடர்பாக விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஸ்வேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு 19 வயதாகிறது.செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில 2ம் வருடம் படித்து வருகிறார். இதற்காக ஏகாட்டூரில் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில், சனி, ஞாயிறு கல்லூரி விடுமுறை என்பதால், "வார இறுதி விடுமுறையை தோழியுடன் கொண்டாட நினைத்துள்ளார்.. இதற்காக ஏகாடூரில் தோழியின் அபார்ட்மெண்டுக்கு சென்ற ஸ்வேதா, தோழிகள் சிலருடன் சேர்ந்து மது குடித்ததாக சொல்லப்படுகிறது...

இரவு முழுவதும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த நிலையில் காலையில் ஸ்வேதாவுக்கு தொடர்ச்சியான வாந்தி வந்துள்ளது.ஆனால் வாந்தி நிற்கவில்லை. தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில், மயக்கமும் சேர்ந்து வந்துள்ளது.அப்போது ஸ்வேதா, தனக்கு பார்வை மங்கலாக தெரிகிறது என்று நண்பர்களிடம் சொன்னாராம்.

இதைக்கேட்டு பதறிப்போன நண்பர்கள், ஸ்வேதாவை உடனடியாக டூவீலரில் உட்கார வைத்து, கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனால், சிறிது நேரத்திலேயே ஸ்வேதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்..

ஸ்வேதாவின் மரணம் குறித்து காவல்துறையும் விசாரணையை கையில் எடுத்துள்ளது. ஸ்வேதாவுடன் சேர்ந்து மது அருந்திய  சக தோழிகளிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது..

இப்போது ஸ்வேதாவின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய கேளம்பாக்கம் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.ஸ்வேதா உயிரிழந்த விவகாரம், அவரது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில்தான், விடுமுறை காரணமாக தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வந்தார் ஸ்வேதா.. ஆனால், ஊரிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து கடுமையான மன உளைச்சலில் இருந்தாராம்.அதனால்தான், தோழிகளுடன் சேர்ந்து ஞாயிறு பொழுதை கழிக்க சென்றிருக்கிறார்..

இந்நிலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகவும், அதுவே அவரது உயிரிழப்புக்கு காரணம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மது போதை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமலேயே வாந்தி மயக்கம், பார்வை கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதனிடையே, தோழியின் அறையில் தங்கி இரவு முழுவதும் ஓட்கா ஜோனோவை மாணவி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. அதனால், மாணவியுடன் யார் யார் மது அருந்தினார்கள்? மது எப்படி கிடைத்தது? என்பது குறித்த விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறதாம்.. எனினும், மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *