ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஜோ பைடனை சந்திக்க இருக்கும் உக்ரைன் அதிபர்!
- Muthu Kumar
- 22 Sep, 2024
அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் பயணப்படவிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் தமது திட்டத்தை ஜோ பைடனிடம் வெளிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா அளிக்கும் ஆயுதங்களுடன் ரஷ்யாவுக்குள் தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.இதையே ஜனாதிபதி ஜோ பைடனிடம் நேரிடையாக முறையிட இருப்பதாகவும், ஜோ பைடன் பதவி விலகும் முன்னர் வரலாற்றில் இடம்பெறவும், அத்துடன் உக்ரைன் நாட்டை பலப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றே ஜெலென்ஸ்கி கூறி வருகிறார்.
அமெரிக்காவில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோருடன் சந்திப்பை முன்னெடுக்கவும், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றவும், ஜோ பைடனிடம் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் திட்டத்தையும் அவர் சமர்ப்பிக்க இருக்கிறார்.
ஜெலென்ஸ்கியின் திட்டம் என்ன என்பது குறித்து இதுவரை தகவலேதும் வெளியாகவில்லை. ஆனால் ரஷ்யாவுக்குள் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி தீவிரமாக தாக்குதலை முன்னெடுப்பதும் ஜெலென்ஸ்கியின் திட்டத்தில் ஒன்று என்றே கூறப்படுகிறது.
ஆனால் ரஷ்யாவுக்குள் தொலை தூரம் சென்று தாக்குதல் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவும், பிரிட்டனும் முழுமையாக ஒப்புதல் அளிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. பிரிட்டன் ஒப்புதல் அளிக்க தயார் என்றே கூறி வருகிறது.
அமெரிக்கா தற்போதும் மெளனம் காத்து வருகிறது. இதனால் பிரிட்டன் தயங்கி வருகிறது. இந்த விவகாரம் குறித்து பல மாதங்களாக ஜெலென்ஸ்கி போராடி வந்தாலும் இதுவரை இரு நாடுகளும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதற்கிடையில் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் முன்னெடுத்த ஊடுருவல் வெற்றியடைந்துள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *