ஈரான் அதிபர் மரணத்தால் கச்சா எண்ணெயின் விலை சரிவு!
- Muthu Kumar
- 21 May, 2024
கச்சா எண்ணெய் உற்பத்தியில் கிங்மேக்கராக இருக்கும் ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நேரத்தில் இதன் விலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இவரது மரணம் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது மொத்தமாக நிலைமை மாறியுள்ளது. இந்த நிலையில் ஆசியச் சந்தை வர்த்தகத்தில் செவ்வாய்க்கிழமை நிலைமை மொத்தமாக மாறியது என்றால் மிகையில்லை.
நேற்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கண்டு உலக நாடுகள் பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் சரிந்தன.இன்றைய விலை உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்கப் பொருளாதார சூழ்நிலையும், கச்சா எண்ணெய் பயன்பாட்டு குறித்த கணிப்பு தான். அமெரிக்கப் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு உயர்வாக இருக்கும் என்ற அச்சமும், நுகர்வோர் மற்றும் தொழில்துறையில் கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்கும் என முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.
இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை இன்று குறைந்துள்ளது, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 83.23 டாலராகக் குறைந்து, இது நேற்றைய விலையைக் காட்டிலும் 0.57% சரிவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு 79.32 டாலர் என 0.6% சரிவைக் கண்டது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பணவீக்கம் குறைவதை உறுதிப்படுத்தும் கூடுதல் அறிகுறிகளுக்காகக் காத்திருப்பதாகத் திங்களன்று தெரிவித்ததால், இரு பென்ச்மார்க் கச்சா எண்ணெய் விலை இன்று அதிகரித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *