பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க ஈராக் நாடாளுமன்றம் முடிவு!
- Muthu Kumar
- 14 Nov, 2024
மேற்கு ஆசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில் ஷியா முஸ்லீம் பழமைவாதக் குழுக்கள் பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.
முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். இந்நாட்டில் பெண் குழந்தைகளின் திருமண வயது வரம்பு 18 ஆக இருந்தது.1950ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும் 2023 ஐ.நா ஆய்வறிக்கையின் படி 28 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடக்கிறது.
இந்நிலையில், பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்கும் சட்ட திருத்தத்தை ஈராக் நாடாளுமன்றம் தற்போது நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.ஷியா பழமைவாத குழு பெரும்பான்மையாக இருப்பதால் இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது.
எனினும், இந்த முடிவுக்கு பெண்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இளம் பெண்களுக்கு பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் அதிகரிக்கும் என்றும், திருமணமான பெண்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *