கைலாசாவில் பண மதிப்பு இல்லை, உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் - நித்யானந்தா!

top-news
FREE WEBSITE AD

நித்யானந்தா மீது பல வழக்குகள் இருந்து,போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் தலைமறைவானார்.கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக நித்யானந்தாவே கூறியிருந்தார். அதனை ஹிந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவரே கூறியிருந்தார். தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், பணமதிப்பு உள்ளதாகவும், அந்நாட்டின் அதிபராக கூறிக்கொள்வதாக நித்யானந்தா அறிவித்தார்.

ஆனால் அந்த நாடு எங்கு இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. அங்கிருந்து அவ்வபோது காணொளி மூலம் சொற்பொழிவும் ஆற்றி, அதனை தனது பிரத்யேக யுடியூப் சேனலில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வரும் ஜூலை 21ம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 'கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம்,' என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள காணொளியில் தங்கள் கைலாசா நாட்டில் பணத்திற்கு மதிப்பு கிடையாது. உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும். கைலாசாவில் நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம் செலவு கிடையாது என கூறியுள்ளார். மக்களுக்கு எந்தவிதமான வரியும் கிடையாது. இந்த சட்டம் மாற்றப்படாது எனவும் இன்று கைலாசா எங்கு இருக்கிறது என்ற தகவலை வெளியிடுவேன் என அவர் கூறியுள்ளார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Venkatesan

Pls connect number sher