ஸ்லோவிகியா நாட்டு பிரதமர் சுடப்பட்டார்! உலக நாட்டுத் தலைவர்கள் கடும் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோவை படுகொலை செய்யும் நோக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அவர் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பல உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுதான் ஸ்லோவாக்கியா . இந்த நாடு போலந்து, உக்ரைன், ஹங்கேரி, ஆஸ்திரியா, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் ஃபிகோ.

இவர் 4வது முறையாக பிரதமராக உள்ளார். இவர் ரஷ்யா ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவராக அறியப்படுகிறார். மேலும் நாட்டின் வெளியுறவு கொள்கையை ரஷ்யாவுக்கு ஆதரவாக வகுத்துள்ளதாகவும் ராபர்ட் ஃபிகோ மீது குற்றச்சாட்டு என்பது உள்ளது.

இந்நிலையில் தான் ராபர்ட் ஃபிகோ இன்று அந்த நாட்டின் தலைநகரான பிராடிஸ்லாவாவில் இருந்து 150 கிலோமீட்டர் வடகிழக்கே உள்ள ஹண்ட்லோவாவில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென்று மர்மநபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் ராபர்ட் ஃபிகோவின் உடலில் குண்டு பாய்ந்தது. ராபர்ட் ஃபிகோவின் அடிவயிற்றில் குண்டு துளைத்தது. இதனால் அவர் தரையில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துப்பாக்கியால் சுட்டதாக கருதப்படும் நபரை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர். அவர் யார்? பின்னணி என்ன? என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் ஸ்லோவாக்கியா நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு உலக தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேலும் இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் மிகவும் கொடுமையானது, கண்மூடித்தனமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *