குழியில் விழுந்த பெண்ணைத் தேடும் பணி இன்னும் தொடர்கிறது!
- Shan Siva
- 24 Aug, 2024
கோலாலம்பூர்: நேற்று காலை தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் ஒரு பள்ளத்தில் விழுந்த பெண்ணை மீட்கும்பணி இன்னும் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதலுக்கு உதவும் வகையில் மண்வாரி இயந்திரம் கொண்டு வரப்பட்ட போதிலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தேடுதலின் போது, தீயணைப்பு வீரர்கள் கான்கிரீட்டால் கட்டப்பட்ட 1.5 மீட்டர் ஆழமான அறையைச் சுற்றி தோண்டினர்.
இந்திய நாட்டவரான சம்பந்தப்பட்ட பெண்ணைத் தேடுவதற்காக இரண்டு ஸ்கூபா டைவர்ஸ் தோண்டப்பட்ட பகுதியில் உள்ள அறைக்குள் நுழைந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை இயக்குனர் நோர்டின் பௌசி செய்தியாளர்களிடம் கூறினார்.
48 வயதான அப்பெண் நீரோட்டத்தால் கொண்டு செல்லப்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் மீட்புப்படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், கோலாலம்பூர் மேயர் மைமுனா ஷெரீப், பெண்ணின் கணவரை சந்தித்து தனது அனுதாபத்தை வெளிப்படுத்தியதாக கூறினார்.
பாதிக்கப்பட்டவர் நேற்று காலை 8.22 மணியளவில் சிலாங்கூர் மேன்சனில் இருந்து லெபு அம்பாங்கிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, குழியில் விழுந்தார்.
அந்த பெண் இரண்டு மாதங்களாக மலேசியாவில் விடுமுறையில் இருந்ததாகவும், நாளை நாட்டை விட்டு வெளியேறவிருந்ததாகவும் நகர காவல்துறை தலைவர் ருஸ்டி இசா கூறினார்.
நிலத்தடி எரிவாயு நிலைமைகள் உட்பட - பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதால், தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு கவனமாக திட்டமிடல் தேவை என்று ருஸ்டி முன்னதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *