வடகிழக்கு பருவமழை மாற்றத்தின் விளைவால் கெம்போங் மீன்கள் விநியோகம் குறைந்துள்ளது!
- Muthu Kumar
- 12 Oct, 2024
கோலாலம்பூர், அக். 12
வடகிழக்கு பருவமழை மாற்றத்தின் விளைவால் மீன்கள் குறிப்பாக, கெம்போங் வகை மீன்களுக்கான விநியோகம் குறைந்துள்ளது. மீன் வகையில் தற்போது கெம்போங் வகை மீன்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. எனினும், இப்போதைக்கு மீன்கள் விநியோகம் போதுமான அளவில் இருப்பதாகவும் அவற்றின் விலைகளும் தேவைகளுக்கு ஏற்ற வகையிலேயே இருப்பதாகவும், கெடா மாநில மீனவர் சங்கத் தலைவர் அஸ்மி பஹ்ரி தெரிவித்தார்.
“வடகிழக்கு பருவமழை மாற்றத்தின் விளைவால் மீன்கள் சற்று குறைந்திருக்கின்றன. ஆனால், சராசரியாக மீனவர்கள் போதுமான மீன்களைப் பிடித்து வருகின்றனர். “இன்றைக்கு அலோர்ஸ்டார் மொத்த சந்தையில் கெம்போங் மீன் கிலோ ஒன்றுக்கு 9 வெள்ளி 50 காசுக்கு விற்கப்பட்டது. சிறிய கெம்போங் மீன் கிலோ ஒன்றுக்கு 6 வெள்ளிக்கு விற்கப்பட்டது” என்று அவர் கூறினார்.
வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதனால் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் வெள்ளத்தை எதிர்கொள்ள மீனவர்கள் முன்கூட்டியே தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக, பெரித்தா ஹரியான் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
வடகிழக்கு பருவமழை வழக்கமாக நவம்பர் மாதத் தொடக்கத்தில்தான் ஏற்படும். ஆனால், பருவநிலை மாற்றத்தினால் இம்முறை ஒரு வாரத்திற்கு முன்னரே அதாவது இம்மாத இறுதி வாரத்தில் அது தொடங்கி விடும் என்று, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *