பிகேஆர் துணைத் தலைவர் போட்டி மேடு பள்ளம் நிறைந்த திடலில் நடக்கும் ஒரு ‘போர்’!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 19-

நூருல் இஸ்ஸாவிடம் தோல்வி அடைந்துவிடக் கூடிய ஒரு சூழலில் தாம் இருப்பதை அறிந்திருந்தும், இம்முறை "வாழ்வா? தாழ்வா?" என்ற நிலையில் தமது துணைத் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு 'போர் முனைக்குச்' செல்வதென்று தாம் முடிவு செய்திருப்பதாக, டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லிதெரிவித்துள்ளார். "தோல்வியுற்றால் என் கதை இதோடு முடிந்தது" என்ற நிலையில், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தாம் இறங்கி இருப்பதாகவும் ரபிஸி கூறியுள்ளார்.

துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதிலிருந்து தாமாகவே தாம் விலகிக் கொள்ளும் அளவுக்கு தம்மை பலவீனப்படுத்தும் நோக்கத்தில்தான் இதற்கு முன்னர் நூருல் இஸ்ஸாவுக்கு பிகேஆர் தலைவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்தனர் என்று ரபிஸி குறிப்பிட்டுள்ளார். எனினும், தாம் ஒரு பிடிவாத போக்குடைய நபர் என்றும் தம்மை எதிர்த்துப் போட்டியிடுபவருக்கு 'இலவச' வெற்றியை வழங்கப் போவதில்லை என்றும், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சரவாக்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பொருளாதாரத் துறை அமைச்சருமான ரபிஸி தெரிவித்தார்.

"பரவாயில்லை, போட்டியிலிருந்து விலகி விடுவோம் என்று நான் மனமுடைந்து போகும் நிலைக்கு என்னை இட்டுச் செல்ல, தொடக்கம் முதலே எனக்கு எதிராக ஓர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை நான் முன்கூட்டியே அறிவேன். நான் அப்படி செய்தால் நூருல் இஸ்ஸா போட்டியின்றி வெற்றி பெறுவார். ஆனால் நான் ஒரு பிடிவாதக்காரன் என்பதால் அப்படி செய்யவில்லை.

"வாழ்வா? தாழ்வா?" என்ற நிலையில்தான் போட்டியில் இறங்கி இருக்கின்றேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். சரவாக்கில் உள்ளவர்கள் போல் நிலைமை மாறவில்லை. இப்போட்டியில் நான் வெற்றி பெறுவது இன்னும் முடிவாகவில்லை. தோல்வியடைவது என்னமோ உறுதி" என்று ரபிஸி தெரிவித்தார்.

பிரதமர்டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியான நூருல் இஸ்ஸாவின் வெற்றிக்கான அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருடன் தாம் மோதுவதாகவும் ரபிஸி தெரிவித்தார்.
“நூருல் இஸ்ஸாவிடம் நான் தோற்க வேண்டும் என்பதற்காக கட்சி முழுமையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை இந்த அறிகுறி தெளிவாக விவரிக்கிறது. "என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் சரவாக் வரவில்லை. இது அவரவர் உரிமை. இப்போட்டியில் நான் வெற்றி பெற்றால், இந்த உலகம் அழிந்துவிடும் என்பது போன்ற ஒரு தோற்றமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

“அனைத்தும் தயார்படுத் தப்பட்டுள்ள நிலையிலும், இப்போட்டியானது, மேடு பள்ளம் நிறைந்த திடலில் நடக்கும் ஒரு 'போர்” என்று. ரபிஸி தெரிவித்தார்.பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியுற்றால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட தாம் தயாராக இருப்பதாக, ரபிஸி இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

Datuk Seri Raphizi Ramli nekad bertanding jawatan Timbalan Presiden PKR walaupun sedar berdepan kekalahan kepada Nurul Izzah. Beliau enggan mengalah tanpa bertanding dan menyatakan kesediaan meletak jawatan menteri jika kalah dalam pemilihan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *