எலான் மஸ்க் செய்வது அறிவியல் என்றாலும், மற்றொரு பக்கம் இயற்கைக்கு புறம்பானது!

top-news
FREE WEBSITE AD

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எகஸ் மற்றும் டெஸ்லா நிறுவனகளின் சி.இ.ஓ ஆவார். ஸ்பேஸ் எகஸ் நிறுவனத்தில் பல ஆராய்ச்சிகளும், எதிர்கால சிந்தனையுடன் செயல்படும் வாகனங்கள் மற்றும் ராக்கெட்டுகளை உற்பத்தி செய்து வருகிறார்.

அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நியூரோலிங்க் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் எலான் மஸ்க்குடன் 7 விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் நிபுணர்கள் இணைந்து உருவாக்கப்பட்டதாகும். இவர்களின் குறிக்கோள் சாதாரண மனித ஆற்றலை கணினி மற்றும் ஏஐ உதவியுடன் பல மடங்கு உயர்த்துவதாகும்.

அதனால் மனிதனின் மூளையில் சிப்பை பொருத்தி அவர்களை எண்ணங்களால் லேப்டாப் மற்றும் கணினி போன்ற சாதனங்களை பயன்படுத்த வைக்கின்றனர். இது நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு உதவ கூடும் என்று கூறினர். இதுகுறித்து நியூ ரோலிங் நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், முதலில் அவர்கள் விலங்குகளுக்கு சிப் பொருத்தி சோதனையிட்டனர். பின் மனிதர்களிடமும் செயல்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி முதன் முதல் கட்டமாக பக்கவாத பாதிப்பால் பாதிக்கப்பட்ட நோலண்ட் அர்பாக் எனும் மனிதனின் மூளையில் பயொனிக் சிப்பை பொருத்தினர்.

நோலண்ட் அர்பாக் என்பவர் 8 ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் அவரால் கணினியில் சதுரங்கம் மற்றும் பல கேம்களை விளையாட முடிகிறது என்கின்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து நியூரோலிங்க் ஆய்வாளர்கள் அந்த சிப்பை மூளையில் இன்னும் ஆழமாகவும் மற்றும் பல அடுக்குகளிலும் வைத்து சோதனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கண் பார்வை இல்லாதவர்களுக்கு கூட கண்பார்வை வரவைக்க முடியும் என்று கூறுகின்றனர்.

இந்த சிப்பை தானாக அப்டேட் ஆகும் வசதியுடன் உருவாக்க போவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். அதன்படி இந்த சிப்பை அடுத்து கை,கால் செயல் இழந்த நபர்களிடம் பொருத்தி சோதனை செய்ய இருக்கிறார்கள். மேலும் எலான் மஸ்க் செய்வது ஒரு பக்கம் அறிவியல் ஆராய்ச்சி என்றாலும், மற்றொரு பக்கம் இது இயற்கைக்கு புறம்பானது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்று பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *