தங்கள் நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததற்கு சீனா கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்நிலையில்  தங்கள் நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்த தடைகளுக்கு சீனா கடும் கண்டனமும், எதிா்ப்பும் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக சீன வா்த்தக அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் 

சீனாவைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது. இதன்மூலம் சீன நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்குவதை  தடுத்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள இந்தப் பொருளாதாரத் தடை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தலைபட்ச  நடவடிக்கையாகும்.

இது சா்வதேச வா்த்தகத்தைப் பாதிக்கும். இந்தத் தடை வா்த்தக விதிகளுக்கு எதிரானது. இந்த நியாயமற்ற நடவடிக்கையை அமெரிக்கா உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஏனெனில் சீன நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் முக்கியக் கடமையாக உள்ளது.


 சீன நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்தியில், 'சீனாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள் ரஷிய நிறுவனங்களுக்கு பல்வேறு கருவிகளுக்கான உதிரிபாகங்களை அனுப்பி வருகின்றன. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யவின் போரில் சீனா நடுநிலை வகிப்பதுபோல காட்டிக் கொண்டாலும், மேற்கத்திய நாடுகள் மீதுள்ள பகையுணா்வு காரணமாக ரஷ்யாவை ஆதரித்து வருகிறது' என்று கூறப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *