இலங்கை அதிபரின் இந்தியா வருகையை உன்னிப்பாக கவனிக்கும் சீனா!

- Muthu Kumar
- 15 Dec, 2024
இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க வெற்றி பெற்றார்.அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக திசநாயகே இன்று இந்தியா வருகிறார். மூன்று நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரும் திசநாயக்க, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரமேதாசா ஆகியோரை தோற்கடித்து இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, இலங்கையின் 9-வது அதிபராக திசநாயகே பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக திசநாயகே இந்தியா வர முடிவு செய்தார். அதன்படி, இன்று இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். மூன்று நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரும் திசநாயக்க, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோல, மீனவர்கள் விவகாரம் குறித்து பேசப்பட வாய்ப்பு உள்ளது. பூகோள ரீதியாகவும் இந்தியாவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் இலங்கையை கைக்குள் போட்டுக்கொள்ள சீனா வியூகம் வகுத்து வருகிறது. இலங்கையில் பல்வேறு முதலீடுகளை சீனா செய்ய தீவிரம் காட்டுகிறது. அதேபோல, சீனாவின் உளவு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள், இலங்கை துறைமுகங்களில் நிறுத்துவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உள்ளது.
இத்தகைய சூழலில்தான், இலங்கை அதிபர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருகை தந்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் இலங்கை மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்து இருந்தார்.
இத்தகைய சூழலில் தான் இலங்கை அதிபரின் இன்றைய இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 15 முதல் 17 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அதிபர் திசநாயகே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக டெல்லியில் நடைபெறும் தொழில் துறை நிகழ்ச்சியிலும் இலங்கை அதிபர் பங்கேற்க உள்ளார். அதேபோல புத்த கயாவிற்கும் செல்ல உள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *