இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை.. முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசம்

top-news
FREE WEBSITE AD

அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்து மதத்தில் பெரிய ஒற்றுமை வராது என்ற தைரியத்தில் இன்னும் அரசியல்வாதிகள் பழைய அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.ஆன்மிக ஆட்சி தேவை.தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளது.. கொள்கைக்காக 5 லட்சம் பேர் வந்துள்ளனர், இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை என்று மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.

இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- வெற்றி வேல்.. வீர வேல்.. நாம் யாரும் நிச்சயமாக பயப்பட தேவையில்லை.. இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்கு மழை பெய்யாது.. மழைத்துளிகள் என்று சொல்வதை விட இது கண்ணீர் துளிகள்.. நம்முடைய மூத்த தலைவர்கள் ராமலிங்க நாடாரின் கண்ணீர் துளி.. வீரத்துறவி ராமலிங்க கோபாலின் கண்ணீர் துளி.. தன் சித்தாந்தம், மதத்திற்காக வெட்டி சாய்க்கப்பட்ட ராஜகோபாலின் கண்ணீர் துளி.. அன்னிய சக்திகளால் யாரெல்லாம் வெட்டி சாய்க்கப்பட்டார்களோ அவர்களுடைய கண்ணீர் துளி..

இவ்வளவு பெரிய கூட்டம்.. இது ஒரு சாதாரணமான கூட்டம் இல்லை. ஒரு இனம் தன்னுடைய குரலை உறக்க சொல்கிறது. தங்களுடைய உரிமையை நிலைநாட்ட துடிக்கிறது. எங்கெல்லாம் சனாதன தர்மத்துக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் அங்கே நான் இருப்பேன் என்று சொல்லி இது தான் நம் முதல் வேலை என்று இங்கு வந்திருக்கிறார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்..

உலக மக்கள் தொகையில் யூதர்கள்  0.2 சதவீதம் பேர் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வியல் முறையை தொந்தரவு செய்ததற்காக, 0.2 விழுக்காடு இருக்கும் மக்கள் 4 நாடுகளோடு சண்டையிட்டு கொண்டு இருக்கிறார்கள். நாம் யாருக்கும் எதிரிகள் கிடையாது.. நம்மை எதிரியாக நினைப்பவர்களுக்கு மட்டும் தான் நாம் எதிரி.

நம் நாட்டில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டால் சில நபர்களுக்கு பிரச்சினை. எதற்காக இந்த இனம் இங்கு ஒன்றாக இருக்கிறது. நம்ம ஊரில் மட்டும் தான் ஏப்ரல் 22 ஆம் தேதி இந்து வாழ்வியல் முறையை பின்பற்றியவர்களை தனித்தனியாக நிறுத்தி அவர்கள் 26 பேரையும் கொன்று இருக்கிறார்கள். இந்த மதம் இருக்கக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இஸ்ரேல் எப்படி நிற்கிறார்கள்.. அமெரிக்கா எப்படி நிற்கிறார்கள் என்று இப்போது பார்க்க வேண்டும்.. என்னுடைய வாழ்வியல் முறைக்கு பிரச்சினை ஏற்பட்டால் நானும் எழுந்து நிற்பேன். அடிப்பேன்.. நம் இந்து மதத்தை பின்பற்றியவர்களுக்கு சிறிய தொந்தரவு செய்தால் நாம் அதை கண்டுக்கொள்ள மாட்டோம்.. பெரிய பிரச்சினை கொடுத்தாலும் பெரிதாக கண்டுக்கொள்ளமாட்டோம்..

அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்து மதத்தில் பெரிய ஒற்றுமை வராது என்ற தைரியத்தில் இன்னும் அரசியல்வாதிகள் பழைய அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆன்மிக ஆட்சி தேவை.. தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளது.. கொள்கைக்காக 5 லட்சம் பேர் வந்துள்ளனர், இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை..என்று அண்ணாமலை பேசினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *