சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை கொட்டிய கும்பலின் பின்னணியில் யார்?

top-news
FREE WEBSITE AD

திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். இதனால் இவரை 6 மாதங்கள் குண்டர் சட்டத்தில் அடைத்தனர்.

கரூரில் செந்தில் பாலாஜி பினாமி பெயரில் இடம் வாங்கி பிரம்மாண்ட மாளிகையை கட்டி வருகிறார் என்கிற செய்தியை ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்தவர்தான் சவுக்கு சங்கர். இதனால், செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில்தான் தான் கைது செய்யப்பட்டதாக அப்போது கூறினார் சவுக்கு சங்கர்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் திமுகவை மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் சவுக்கு சங்கர். மேலும், டிவி சேனல்களையும் கட்டுப்படுத்தி திமுகவுக்கு எதிரான செய்திகளை வரவிடாமல் தடுக்கிறார்கள் எனவும் பகீர் புகார்களை கூறிவந்தார். மேலும், ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருக்கிறார். அதிகாரிகள்தான் ஆட்சியை நடத்துகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில்தான், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 9.30 மணியளவில் துப்புறவு பணியாளர்கள் உடைகளை அணிந்த 50க்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மலக்கழிவுகளை கொட்டினார்கள். அப்போது சவுக்கு சங்காரின் தாய் மட்டும் வீட்டில் இருந்தார் அவரையும் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட காணொளியை சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *