யார் கடத்தினார்கள்? எதற்காக சூர்யா தற்கொலை செய்துகொண்டார்? பகீர் பின்னனி!

top-news
FREE WEBSITE AD

தமிழ்நட்டில் மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவருக்கு சொந்தமாக வணிக வளாகம், வீடு ஆகிய சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது 14 வயது மகன் பள்ளிக்குச் செல்லும் போது ஆம்னிவேனில் பின் தொடர்ந்து வந்த கடத்தல் கும்பல் ஆட்டோ ஓட்டுநரோடு சேர்த்து கடத்திச் சென்றது.

சிறுவனின் தாயை தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் கேட்டு கும்பல் மிரட்டல் விடுக்க இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோ ஆதாரங்களுடன் சிறுவனின் தாய் ராஜலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட கடத்தல் கும்பலை தேடி வந்த போலீசார் சிறுவனை சில மணி நேரங்களில் மீட்டனர்.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவலர் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையிஸ் குஜராத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
மேலும் பிரபல ரவுடி மகாராஜா என்பவர் மூலம் கூலிக்கு ஆட்களை நியமித்து இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியதே அவர் தான் என்றும் கூறப்பட்டது.

இந்த வாக்குமூலத்தையடுத்து, சூர்யாவையும் பிரபல ரவுடி மகாராஜாவையும் போலீஸார் தேடி வந்த நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ஆட்சியர் அலுவலக தோட்டத்தில் சூர்யா விஷம் குடித்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.

குஜராத்தில் மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளராக இருப்பவர் ரஞ்சித் குமார் ஐ.ஏ.எஸ். இவருக்கும், இவரின் மனைவி சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் தான் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சூர்யா, குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள தனது கணவர் வீட்டுக்கு உதவி கேட்டு சென்றுள்ளார். இது குறித்து ரஞ்சித் குமாரின் ஊழியர்கள் அவருக்குத் தகவல் கொடுத்தனர். வேலை சம்பந்தமாக வெளியே சென்றிருந்த ரஞ்சித் குமார் தன்னுடைய மனைவியை உள்ளே விட வேண்டாம் என்று தன் ஊழியர்களிடம் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து அவரை உள்ளேவிட ஊழியர்கள் மறுத்து விட்டனர், எனினும் வீட்டுக்குள் செல்ல சூர்யா தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால், முடியவில்லை. இதனால் தன் கணவர் வீட்டுக்கு முன்பாகவே சூர்யா விஷம் குடித்திருக்கிறார் உடனே அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனலிக்காமல் சூர்யா உயிரிழந்தார்.

இந்நிலையில் சூர்யா விஷம் குடித்ததற்கு முன்னதாக எழுதி வைத்திருந்த 4 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. அதில், 'பள்ளி மாணவன் கடத்தல் சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், இந்த கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை நான் பார்த்தது கூட இல்லை. என்னை ராஜலட்சுமி இந்த விவகாரத்தில் ஏன் தொடர்புபடுத்தினார் என தெரியவில்லை என்று அதில் எழுதியுள்ளார்.

மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ராஜலெட்சுமி தன்னை ஏற்கெனவே தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாகவும், தான் வாங்கிய சிறிது பணத்திற்கு பல லட்சம் வட்டி போட்டு மதுரையில் உள்ள தனக்கு சொந்தமான காம்ப்ளக்சை அபகரித்து விட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் கடத்தலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சூர்யா கடிதத்தில் மறுத்திருக்கும் நிலையில், உண்மையில் சிறுவனை கடத்தியது யார்? சூர்யா உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நடந்தது என்ன போன்ற கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில், போலிசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த வழக்கு குறித்து மகாராஜவிடம் முழுமையாக விசாரித்தால் மட்டுமே முழு உண்மை தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *