தமிழ் மலர் செய்தியாளர் இரா.கோபிக்கு ஐஜிபி கௌரவிப்பு!

- Muthu Kumar
- 28 May, 2025
கோலாலம்பூர், மே 28-
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் செய்தியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் விருதும் வழங்கினார்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகச் செய்திகளையும் மாவட்ட போலீஸ் நிலையத்தின் செய்திகளையும் அவர்களின்
செயல்களையும் திறம்பட வெளியிட்டதற்காக செய்தியாளர்கள் சான்றிதழும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் மலர் பத்திரிகையின் குற்றப் புலனாய்வுத் துறை செய்தியாளர் இரா.கோபிகிருஷ்ணா என்ற கோபி பாராட்டுச் சான்றிதழும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இரா.கோபி குற்றப் புலனாய்வுத் துறை செய்தியாளராக கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி செய்திகளைச் சேகரித்து வந்துள்ளார். போலீஸாரின் பத்திரிகை வாயிலாக பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். இதுவரை சுமார் 18க்கும் மேற்பட்ட சிறப்புச் சான்றிதழ்களை அவர் பெற்றிருக்கிறார்.
ஊடகங்கள் பொதுமக்களின் இதயங்களையும் மனங்களையும் வெல்லும் திறனுடன் தேசிய நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.நாட்டின் பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காக எண்ணங்களைப் பதித்து இதயத்தையும் மனதையும் வெல்வதில் ஊடகத் தளங்கள் தனித்துவமான சக்தியைக்
கொண்டுள்ளன.
பொதுவாக ஊடகங்கள் காவல்துறையின் தூண்களாக இருப்பதுடன் நம்பிக்கையிலும் முதன்மையாகும். அவை செய்திகளையும் தகவல்களையும் வழங்குபவர்களாக மட்டுமல்லாமல் உண்மையையும் நீதியையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் ஓர் ஆதாரமாகவும் செயல்படுகின்றன என்று டான்ஸ்ரீ ரஸாருடின் தமது உரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ ரஸாருடின் பாராட்டுச்
சான்றிதழையும் விருதையும் இரா.கோபிக்கு வழங்கியபோது, அருகில் இருந்த போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயூப் கான் மைடின் பிச்சை தமது வாழ்த்தை கோபிக்கு தெரிவித்துக் கொண்டார்.மேலும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இஸா, இரா.கோபிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *