இந்தி தெரிந்தவரிடம்தான் அரசியல் கற்க வேண்டுமா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி?

top-news
FREE WEBSITE AD

தமிழ்நட்டின் பெரம்பலூரில் பாஜ சார்பில் சமத்துவ விருந்து நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நடிகரும், பாஜ பிரமுகரான சரத்குமார் தலைமை வகித்து பேசியதாவது: இந்தி ஒரு கட்டாய மொழியாக வர வேண்டும் என்று எடுத்த முடிவினை மாற்றி, ஏதாவது ஒரு இந்திய மொழியை 3வது மொழியாக கற்று கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறார்கள்.

இப்போது இன்னொருவர் அரசியலுக்கு வந்து விட்டார். அவரை பற்றி நான் பேசவேகூடாது என்று இருந்தேன்.

விஜய் என்ன பேசுகிறோம் என தெரிந்து கொண்டு பேச வேண்டும். நீங்கள் ஒரு மிகவும் பிரபலமான நடிகர். நானே சொல்லி இருக்கிறேன். நீங்கள் சூப்பர்ஸ்டார் அளவுக்கு இருக்கிறீர்கள். அதனால் பொதுமக்களிடம் உண்மையை பேச கற்றுக் கொள்ளுங்கள். உண்மை எது என்று புரிந்து கொண்டு பேசுங்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் பேசும்போது கருத்தோடு பேசவேண்டும். உண்மையை பேசவேண்டும். விஜய்க்கு அரசியல் வியூகத்தை சொல்லி கொடுப்பவர் தான் பிரசாந்த் கிஷோர்.

இந்தி தெரிந்தவரிடம் இருந்துதான் நீங்கள் தமிழக அரசியல் கற்றுகொள்ள வேண்டுமா?. விஜய் அலுவலகத்தில் ஸ்டாலின் கெட் அவுட் என போட்டிருந்த பகுதியில் கையெழுத்து போட பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். கையெழுத்து போட்டால் என்னை வெளியே அனுப்பி விடுவார்களோ என அவர் பயந்துவிட்டார். இல்லாவிட்டால் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போட்டு இருப்பார். யாரிடம் பிராடு செய்கிறீர்கள். வாட் ப்ரோ, ஏன் ப்ரோ, ஒய் ப்ரோ?. இவ்வாறு அவர் பேசினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *