பா ஜ க vs காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைப்பது யார்?

top-news
FREE WEBSITE AD

கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய  தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து, சுமார் 2 மாதங்களாக நாடு முழுவதும் தேர்தலும், தேர்தல் பிரச்சாரமும் களைகட்டியது . முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெற்றது.

இந்நிலையில்,  நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. சூரத் நகரில் ஏற்கெனவே பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதால் மீதம் உள்ள 542 மக்களவை தொகுதிகளில் மட்டுமே நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மத்தியில் ஆட்சி அமைக்க மொத்தம் 272 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இதனால், இன்னும் பாஜகவுக்கு 271 தொகுதிகளே உள்ளன. இந்தியா கூட்டணியும் 295 இடங்களில் நிச்சயம் வெல்லும் என நம்பிக்கையுடன் உள்ளது.

பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா ஆகியோரின் வியூகங்களின்கீழ் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலை சந்தித்தது. நாடு முழுவதும் 414 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட்டுள்ளது. கடந்த முறை 303 இடங்களை வென்ற நிலையில், இம்முறை 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் பெரும்பாலான முடிவுகளும் பாஜக நிச்சயம் 350+ இடங்களில் வெல்லும் என்றே கூறி வருகிறது.

 கர்நாடகா, ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகியவை பாஜகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் நிச்சயம் கடும் போட்டி நிலவும் மாநிலங்களாக பார்க்கப்படுகிறது. இந்த ஆறு மாநிலங்களில் இருக்கும் மொத்தம் தொகுதிகளின் எண்ணிக்கை 204 ஆகும். மெஜாரிட்டியை பெற 272 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், இந்த மாநிலங்களில் மொத்தம் 150 முதல் 170 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே நிச்சயம் ஆட்சியமைக்கும் .

ஒருவேளை இந்தியா கூட்டணி இந்த 6 மாநிலங்களில் அதிக தொகுதிகளை கைப்பற்றியது என்றால், நிச்சயம் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அந்த கூட்டணிக்கு கூடுதலாக குறைந்தபட்சம் 50 தொகுதிகளும் கிடைக்கும் எனலாம். எனவே, இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க இந்த 6 மாநிலங்கள் முக்கியமாகும்.

 அதேபோல் தான் பாஜகவுக்கும். பாஜக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பலமாக காணப்படுவதால் இந்த மாநிலங்களில் 130 சீட்களை பெற்றாலே போதுமான மெஜாரிட்டி கிடைத்துவிடும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *