அப்போது எழாத உறவுமுறை பேச்சு இப்போது எழ வேண்டிய அவசியமென்ன? டத்தோஸ்ரீ அன்வார் கேள்வி!

- Muthu Kumar
- 25 May, 2025
ஜொகூர் பாரு, மே 25-
கடுமையான காலகட்டத்தில் கெஅடிலான் கட்சி இருந்தபோது அப்போது எழாத குடும்ப உறவு முறையிலான பேச்சு இப்போது எழுப்பப்படுவது குறித்து அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று ஜொகூர்பாருவில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் டத்தோஸ்ரீ அன்வார் உரையாற்றினார். அப்போது அன்வார் தாம் சிறையிலிருந்த தருணங்களை சுட்டிக்காட்டி பேசினார்.அந்த நேரத்தில் என் மனைவி டாக்டர் வான் அசிசா இஸ்மாயில் மிகப்பெரிய பொறுப்பை சுமந்து அந்தக் கட்சியின் தலைமைத்துவத்தை தற்காலிகமாக ஏற்றார். இப்போது சொல்லலாம் என் மனைவி, பிள்ளை என்று. அப்போது இதுபோன்ற மாநாடு இல்லை.
நான் சிறை சென்றபோது அசிசாதான் பொறுப்பை ஏற்றார். அப்போது யாரும் குடும்ப கட்சி என்று சொல்லவில்லை. அசிசாவிடம் நான் தலைமை பொறுப்பை ஒப்படைத்தபோது, எந்த பண பலமும் படை பலமும் இல்லை. அப்படியே விட்டு விட்டுச்சென்றேன். அப்போதுகூட ஒரு குடும்ப கட்சியின் ஆட்சி என்று சொல்லவில்லை. அப்போது நான் நினைத்தெல்லாம், சிறைக்கு
சென்ற பிறகு இந்த தீபத்தை (தலைமைத்துவத்தை) யாரிடம் ஒப்படைப்பது என்பதுதான் என்று அவர் சொன்னார்.
குழப்பமான அந்த நேரத்தில் நான் முடிவு எடுத்தபோது குறுகிய காலம்தான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவை ஆண்டுக்கணக்கில் ஆகும் என்று நினைக்கவில்லை.நூருல் இஸ்ஸா பற்றி கூறுகையில், அந்த இளம்வயதில் பல்கலைக்கழகப் படிப்பை விட்டுவிட்டு கட்சியின் போராட்டங்களில் ஈடுபட்டார். அப்போதும் கூட குடும்ப ஆட்சி நடக்கிறது என்று நான் கேள்விப்படவில்லை.
துணைத்தலைவராக நூருல் இஸ்ஸா தேர்வு பெற்றது சொந்த விருப்பத்தின் பேரில் அல்ல, அவை பேராளர்களின் விருப்பதற்கு இணங்க அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.என்னால் தேர்வு செய்யப்பட்டவர். எனவே தங்கள் பணியை அவர்கள் தொடர்வார்கள் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்தார். கட்சியில் அவர்கள் செய்த தியாகங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அதைவிடுத்து இந்த விவகாரங்களை பெரிதுபடுத்தி பூதாகரமாக்க வேண்டாம் என்று கட்சி பேராளர்களை அன்வார் கேட்டுக் கொண்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி தேர்தலில் நூருல் இஸ்ஸா 9,800 வாக்குகள் பெற்று துணைத்தலைவராக வெற்றி பெற்றார். டத்தோஸ்ரீ ரபிசிக்கு 3,866 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
Anwar Ibrahim mempersoal isu dakwaan nepotisme dalam PKR selepas Nurul Izzah dilantik Timbalan Presiden. Beliau menegaskan dahulu isterinya memimpin semasa beliau dipenjara tanpa sebarang kuasa dan tiada siapa menyebut soal keluarga ketika itu. Anwar seru ahli fokus pada perjuangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *