எனது பதிவை நீக்கியது ஏன்? மெட்டாவுக்கு அன்வார் கண்டனம்!
- Shan Siva
- 01 Aug, 2024
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 1: மெட்டா சியோனிச இஸ்ரேலிய ஆட்சியின் கருவியாக மாற
வேண்டாம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மெட்டா நிறுவனத்திற்கு அறிவுறுதியுள்ளார்.
ஹமாஸ் அரசியல்
தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை தொடர்பான வீடியோக்கள், இரங்கல் செய்திகள் மற்றும் விமர்சனங்களை நீக்கியதற்காக
பாலஸ்தீனிய மக்களின் போராட்டத்தை அவமதிக்கும் வகையில் மெட்டாவின் நடவடிக்கைகள் இருப்பது கண்டனத்திற்குரியது
என்று தமது முகநூல் பதிவில் அன்வார் சுட்டிக்காட்டினார்.
அடக்குமுறை
மற்றும் துன்பங்களில் இருந்து தனது தாயகத்தை விடுவிக்க பாடுபடும் ஒரு போராளியைக்
கௌரவிக்கும் பதிவுகளை ஆபத்தானதாக கருதுவது நியாயமற்றது என்று அன்வார் கூறினார்.
இந்த விஷயத்தில் மெட்டா
கோழைத்தனமாகவும், அடக்குமுறையான
சியோனிச இஸ்ரேலிய ஆட்சியின் கருவியாகவும் இருக்காதீர்கள் என்று அவர் நினைவுறுத்தினார்.
ஹமாஸ் தலைவருடனான
சந்திப்புகளின் படங்களைப் பகிர்ந்த முந்தைய நாளின் தமது மூன்று பதிவுகள் சமூக ஊடக
தளத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த இடுகைகள்
அகற்றப்பட்டதுடன் "ஆபத்தான நபர்கள் மற்றும் அமைப்புகள்" என்ற தலைப்பும்
இருந்தது.
இதனை அடுத்து கத்தாரின்
தோஹாவில் ஹமாஸ் தலைவர்களுடன் அன்வார் நடத்திய சந்திப்பின் படங்களை இன்ஸ்டாகிராமில்
இருந்து நீக்கிய மெட்டாவின் செயலுக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *