மகளை நாய் கூண்டில் அடைத்த தாய் கைது!

- Sangeetha K Loganathan
- 25 May, 2025
மே 25,
12 வயது சிறுமியைக் கொடுமை செய்ததாக நம்பப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட 49 வயது தாயாரை 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து தொடர் விசாரணையை மேற்கொள்ளும்படி Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக 12 வயது சிறுமியைக் கொடுமைப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பொதுநலன் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக BARAT DAYA மாவட்டக் காவல் ஆணையர் SAZALEE ADAM தெரிவித்தார்.
தொழில்சாலையில் பணியாளராக இருக்கும் 49 வயது பெண்ணும் அவரின் 47 வயது கணவரும் 12 வயது சிறுமியைக் கடந்த 2 ஆண்டுகளாக உடல் ரீதியாக வன்கொடுமை செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் தற்போது அச்சிறுமி பினாங்கு அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பாதுகாப்பு துறையின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் BARAT DAYA மாவட்டக் காவல் ஆணையர் SAZALEE ADAM தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் மே 29 மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang ibu berusia 49 tahun ditahan reman empat hari kerana disyaki mendera anak perempuannya berusia 12 tahun sejak dua tahun lalu. Mangsa kini dirawat di hospital dan ditempatkan di bawah perlindungan pihak berkuasa kesihatan dan kebajikan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *