மிட்செல் ஒபாமாவின் பேச்சால் கமலா ஹாரிஸ்க்கு பெருகும் ஆதரவு!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவின் சிகாகோவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் இறுதியில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.

இந்நிலையில் தான் மிட்செல் ஒபாமா தனது தனது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை தனது கணவர் பராக் ஒபாமாவுடன் ஒப்பிட்டு பேசியது நெகிழ வைத்தது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோபைடனின் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொடங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு என்பது பெருகி வருகிறது. கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு சாதகமாக வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் பின்தங்கி உள்ளார்.

இந்நிலையில் தான் ஜனநாயக கட்சியின் 2 நாள் தேசிய மாநாடு அமெரிக்காவின் சிகோகோ நகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் இறுதியில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த மாநாட்டில் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிட்செல் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் உள்பட ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா, அமெரிக்கா மீதான நம்பிக்கை மீண்டும் வருகிறது. தற்போது ஏதோ அற்புதமான காற்று வீசுகிறது இல்லையா? உண்மையில் நான் இங்கு அதனை உணர்கிறேன். இந்த அற்புத காற்று நாடு முழுவதும் பரவி வருகிறது. உண்மையில் இது நம்பிக்கையின் சக்தியாக தெரிகிறது.

அமெரிக்க அதிபருக்கு தகுதியான நபராக கமலா ஹாரிஸ் உள்ளார். கடந்த 2008 ல் என் கணவர் ஒபாமாவை(ஒபாமா 2008 முதல் 2016 வரை 2 முறை அதிபராக இருந்தார்) போல் அவருக்கு ஆதரவு உள்ளது. கமலா ஹாரிஸ் நம்மால் கணிக்க முடியாத அளவுக்கு நாட்டுக்காக உழைப்பை போட்டு வருகிறார். நாட்டுக்காக தொடர்ந்து தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வருகிறார்.ஆனால் டொனால்ட் டிரம்ப் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

உலகத்தை பற்றி அவர் குறுகிய பார்வை கொண்டுள்ளார். மேலும் நன்கு படித்த மற்றும் கருப்பினத்தவர்களை சேர்ந்தவர்கள் தனக்கு அச்சுறுத்தலாக நினைக்கிறார். அவர் எப்போதெல்லாம் குறுகிய மனப்பான்மையுடன் யோசிக்கிறாரோ? அப்போதெல்லாம் நாம் உயரத்துக்கு செல்லலாம்.

இப்பொழுதும் கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் மீது தனது விசுவாசத்தை தொடர்ந்து காட்டி வருகிறார். யார் மீதும் கோபம் மற்றும் வெறுப்பை காட்டவில்லை. அனைவருக்குமான வாய்ப்பை அவர் உருவாக்கி வருகிறார். ஆனால் புலம்பெயர்ந்தோர் (மறைமுகமாக கருப்பு இனத்தவர்கள்)வேலைகளை திருடுவதாக கூறியுள்ளார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *