மலேசியா - இந்தியா கூட்டு முயற்சியில் டிஜிட்டல் கவுன்சில்! - கோபிந்த் சிங் அறிவிப்பு
- Shan Siva
- 23 Aug, 2024
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 23: டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான
தீர்வுகளை பரிமாறிக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானதைத் தொடர்ந்து மலேசியாவும்
இந்தியாவும் ஒரு கூட்டு இலக்கவியல் மன்றத்தை நிறுவ உள்ளதாக இலக்கவியல் துறை அமைச்சர்
கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராகிமுடன் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து,
மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில் எனப்படும்
(எம்ஐடிசி) அமைக்கப்பட்டவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள்
தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறினார்.
புரிந்துணர்வு
ஒப்பந்தத்தின் மூலம், பொது
உள்கட்டமைப்பு மற்றும் மின்-ஆளுமை தீர்வுகளில் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும்
அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள அமைச்சு முயல்வதாகவும், மேலும் இரு
நாடுகளிலும் உள்ள தொழில்துறை நிபுணர்கள் மத்தியிலான வணிக கூட்டாண்மைகளை ஆராய்வதாகவும்
அவர் தெரிவித்தார்.
எம்ஐடிசி இலக்கவியல்
திறமைகள் தொடர்பான புதுமையான வழிகளை கண்டறிந்து ஆய்வு செய்யும் என்று அமைச்சு ஓர்
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று
மாதங்களுக்குள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்த தொழில்நுட்பத்
துறையில் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆராய்வதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எம்ஐடிசியின்
மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புகள்
மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் உயர்த்த முடியும் என்று தாங்கள் நம்புவதாக
இது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள்
மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 25.5% இது பங்களிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கோபிந்த் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *