அஜித்குமார் வழக்கில் விஜய்-யின் கூர்மையான நகர்வு!

top-news
FREE WEBSITE AD

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக கிட்டத்தட்ட 24 க்கும் மேலான சிறைச்சாலை மரணம் நடந்துள்ளது. சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞனை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாக எழுந்துள்ள பிரச்சனை தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.

அதாவது FIR, CSR கூட போடாமலேயே திருடன் போல அஜித்குமாரை அடித்து, மிளகாய் பொடி வைத்து துன்புறுத்தி தூத்துக்குடியில் பெனிஸ்க்கு நடந்ததை போல இவரும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். TVK சார்பில் கட்சித் தொண்டர்கள் நேரில் போய் அஞ்சலி செலுத்தி விட்டு அந்த குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்து வந்தனர்.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 போலீஸ் அதிகாரிகளை இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க போலீஸ் குடும்பத்தினர் உயர் அதிகாரிகள் சொல்லி தான் இந்த காரியத்தை செய்ததாகவும் அதற்கு இவங்க எப்படி பொறுப்பாவாங்க என்பது போன்று போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இப்படி பிரச்சனை உச்சத்தை தொட்டு உள்ளது, ஆனால் தளபதி விஜய் அஜித்குமார் வழக்கில் அமைதியாக இருந்ததற்கு இரு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது ஒன்று FIR, பின் பிரேத பரிசோதனை அறிக்கையும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த இரண்டும் கிடைத்தவுடன் நீதிமன்றத்தை அணுகி உள்ளார் விஜய்.

திமுக அரசு செய்தது CBCID விசாரணை ஆனால் TVK விஜய் கேட்டது நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை என்பதை உறுதியாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல்வரை கண்டித்து தீர்வுக்காக நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.

சொல்வது மட்டுமில்லாமல் செயலில் தீவிரம் காட்டி வருகிறார் தளபதி விஜய். இறந்து போன அஜித்குமாரின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்களும் போராடி வருகின்றனர்.எந்த ஒரு தாமதம் இல்லாமல் தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதியாக கிடைக்க வேண்டும். ஜூலை 3 ஆம் தேதி சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, போராட்டம் நடத்தப்பட உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *