ஹிலிர் பேராக் சுயி சாக் பகுதியில் போதைப் பொருள் விற்கும் கும்பலை பிடித்தனர் காவல் துறையினர்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கிருஷ்ணன்)

ஈப்போ, அக்.15-

பேராக் போலீஸ்படையினர் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்,  ஹிலிர் பேராக் சுயி சாக் பகுதியில் வீடொன்றில் கடந்த 10 ஆம் தேதி இரவு 8மணிக்கு அதிரடி பரிசோதைனையை மேற்கொண்டதாக பேராக் போலீஸ்படை தலைவர் டத்தோ பஹாலாவான் ஹாஜி அஜிசி ஹாஜி மாட் அரிஸ் கூறினார்.

இந்த அதிரடி சோதனையில் போலீஸ்படையினர் அப்பகுதி வீட்டிலிருந்து, 4 பாக்கெட் ஹெரேயின் 4.21 கிராம், 4 பாக்கெட் மெத்தபெத்தமின் போதைப்பொருள் 3.21 கிராம் மற்றும் 13 பிளாஸ்டிக் பொட்டலங்களில் 21.863 கிராம் மெத்தபெத்தமின் போதைப்பெ போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். இதன் மொத்த மதிப்பீடு 787, 527.35 ரிங்கிட்டாகும்.

இந்த போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட 1 மலாய்க்கார ஆடவர். இரு இந்திய ஆடவர்களும், 2 சீன ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொண்டபோது இவர்கள் அனைவரும் போதைப்பொருள் உட்கொள்பவர்கள் என்ற அறிய வந்துள்ளது. அத்துடன் இவர்கள் அனைவரும் இதற்கு முன் குற்றப்பதிவு உள்ளவர்கள் என்றும் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்களிடமிருந்த 2 கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் சீல் வைக்கப்பட்டன. இதன் வழி சொத்து மதிப்பு 26 ஆயிரம் ரிங்கிட்டாகும். ஆகவே, இவர்களிடம் சீல் வைக்கப்பட்ட சொத்துடைமையின் மதிப்பீடு 813,527.35 ரிங்கிட் என்று அவர் தெரிவித்தார்.

இக்கும்பல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் செயல்படத் தொடங்கியுள்ளது. இவர்கள் பேராக் மாநிலத்திலுள்ள போதைப் பித்தர்களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு இதை பயன்படுத்தி வந்தனர். இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் 218,664 போதைப்பித்தர்களுக்கு விநியோகம் செய்யக்கூடியவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வழக்கு செக்ஷன் 39பி போதைப்பொருள் அபாயம் 1952 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஐந்து சந்தேகப்பேர்வழிகளும் 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்கு உதவும் பொருட்டு இம்மாதம் 11 முதல் 17 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். பொதுமக்களுக்கும் போலீஸ்படையினருக்கும் இடையே நல்லுறவாலும் உதவும் மனப்பான்மையாலும் இந்த வெற்றி கிட்டியது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இம்மாதிரியான போதைப்பொருள் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன. இவ்வேளையில் பொதுமக்களுக்கு மலேசிய போலீஸ்படை தரப்பினர் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக டத்தோ அஜிசி மாட் அரிஸ் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *