ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடக்குமா?
- Muthu Kumar
- 09 May, 2024
பிசிசிஐக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் கிரிக்கெட் தொடராக ஐபிஎல் போட்டிகள் இருக்கின்றது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிட்ட பிசிசிஐ பிறகு தேர்தல் அட்டவணை வெளியான பிறகு எஞ்சிய போட்டிகளை அதற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தது.
நேற்று ஹைதராபாத்தில் மழை கொட்டி தீர்த்த நிலையில், இன்று பெங்களூருவிலும் தொடர்ந்து மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் ஒரு சூழல் அடுத்த வாரம் தமிழகத்திலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சென்னையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் அடுத்த வாரம் முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்த வாரத்தில் இருந்து இம்மாதம் இறுதிவரை தொடர் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது பொது மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும் பிசிசிஐக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால் ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் 24 ம் தேதியும்,மே 26 ஆம் தேதி இறுதிப்போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது.அப்போது மழை குறுக்கிட்டால் போட்டியை மாற்று தேதியில் நடத்துவதற்கு கூட பிசிசிஐ ஏற்பாடு செய்யவில்லை.
ஏனென்றால் டி20 உலக கோப்பை அடுத்த நான்கு நாட்களில் தொடங்க இருப்பதால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாமல் இருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கூட மழை குறுக்கிட்டதால் போட்டி ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இப்போது ரிசர்வ் டே இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் பிசிசிஐ முழித்து வருகிறது.பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் இன்னும் பல போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இங்கெல்லாம் மழை பெய்தால் நிச்சயமாக அது பிசிசிஐக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *