ஒரு நபர் கொலை செய்யப்பட்டால் ஜாதி கொலையாக மாற்ற கூடாது - பேரரசு!

top-news
FREE WEBSITE AD

கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

நேற்று சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னையில் நேற்று மாபெரும் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அந்தப் பேரணி குறித்து இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளதாவது, ஒரு நபர் கொலை செய்யப்பட்டால் அவரை ஏன் கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையின் பின்னணி என்ன? என்பதை ஆராய்வதை விட அதை அரசியல் கொலையாகவும் ஜாதி கொலையாகவும் மாற்றவே இங்கு துடிக்கின்றனர்.

ஒரு கட்சி இன்னொரு கட்சி மீது பழி சுமத்துவது இறந்தவர் மீது ஜாதி வளையம் வைத்து ஜாதி கொலையாக மாற்றத் துடிப்பது இதெல்லாம் சமூக ஆரோக்கியம் இல்லை. அனுதாபம் காட்டுவதை விட சுய லாபம் காணவே பலர் துடித்து வருகின்றனர்.

சட்ட ஒழுங்கு பின்னடைவு என்பது வேறு. கொலைக்கு ஆளும் கட்சி காரணம் என்பது வேறு. கொலைக்கு நியாயம் கேட்பது வேறு. கொலையில் சுய லாபம் பார்ப்பது வேறு. கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தவர்களால் கொலைக்கான உண்மையான காரணங்கள் என்ன? இந்த விடையை நோக்கி தான் அனைவரும் நகர வேண்டும் என இயக்குனர் பேரரசு பா.ரஞ்சித்தை கடுமையாக சாடியுள்ளார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *