பங்கு சந்தை சரிவால்,மோடி ஆட்சி சரியுமா?

top-news
FREE WEBSITE AD

கடந்த 3 மாதங்கள் இல்லாத அளவுக்கு இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது பிஎஸ்எக்ஸ் (Bombay stock exchange) இல் கிட்டத்தட்ட 1062 புள்ளிகள் சரிந்துள்ளது. இது மிகப்பெரிய சரிவு என்று சொல்கிறார்கள். இதைப் போலவே என்.எஸ்.சியிலும் வீழ்ச்சியைச் சந்துள்ளது பங்குச்சந்தை.

இந்த ஒரு நாள் சரிவுக்கே இந்தியப் பங்குச்சந்தைக்கும் 7 லட்சத்து 62 ஆயிரம் கோடி இழப்பு உண்டாகி உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான பங்குதாரர்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இந்த வீழ்ச்சிக்கு முதல் காரணம், தேர்தல். அடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (foreign institutional investors). இவர்கள் தங்களின் முதலீட்டை இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்ல உள்ளனர் என்பதால் இந்த வீழ்ச்சி என்றும் கூறப்படுகிறது.

முதலில் தேர்தல் எப்படி இந்தப் பங்குச்சந்தையைப் பாதித்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அதாவது மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தல்களில் வாக்கு சதவீதம் என்பது மிகக் குறைவான சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது. அதாவது மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வரவில்லை.

இந்தக் காரணி கூட இந்தியப் பங்குச்சந்தையைப் பாதித்துள்ளது. நாட்டில் நடக்கின்ற ஒவ்வொரு அசைவுகள் கூட பங்குச்சந்தையைப் பாதிக்கும். ஸ்திரமற்ற ஆட்சியை ஒரு நாடு சந்திக்க உள்ளது என்றால் பாதிக்கும். உள்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லாத சூழலால் வர்த்தகம் தேக்கம் அடையும் போதுகூட பங்குச்சந்தை பாதிக்கும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *