பழனியில் நடைபெற உள்ள அனைத்துலக முருகன் மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்பா?
- Muthu Kumar
- 06 Aug, 2024
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். 15 நாட்கள் அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா செல்லும் முன்பாக முதல்வர் ஸ்டாலின் பழனியில் நடைபெற உள்ள அனைத்துலக முருகன் மாநாட்டில் பங்கேற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 22 ஆம் தேதி அமெரிக்கா செல்வார் என்று முதலில் கருதப்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு முறையான அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது 15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் வகையில் முதலமைச்சரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவர் 27ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்படுவார் என்று தகவல் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளையும் சந்திக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின்.
அமெரிக்காவில் மூன்று அல்லது நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். அத்துடன் அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திப்பதுடன் அவர்களையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
பழனி முருகன் கோவிலில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வரை பங்கேற்க செய்ய வேண்டும் என்பதற்காகவே அமெரிக்க பயணத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். முத்தமிழ் முருகன் மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறாராம். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா கிளம்புவதை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளதாகவும் அந்த யாகத்தில் முதல்வர் பங்கேற்கப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *