பழநியில் பாதயாத்திரையாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் அபராதம்!

- Muthu Kumar
- 23 Jan, 2025
தமிழ்நாடு மாநிலம் பழநியில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடாகும். இந்தக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். போகர் இந்தத் தலத்தின் மூலவரைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
பிப்.11ல் தை பூசத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் சுவாமி தண்டாயுதபாணிக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்படுகிறது.மேலும் பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகப் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளைச் சுமந்து தங்கள் நேர்த்திக்கடனை முருகப்பெருமானுக்கு செலுத்துவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அனுமதியின்றி அன்னதானம் வழங்கக்கூடாது.
பாத யாத்திரைக்குச் செல்வோருக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையிடம் தக்க அனுமதியைப் பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.முறையான அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *