பிரபல யுடியூபர் பிரசாந்தை கடுமையாக விமர்சித்த பாடகி சின்மயி!

top-news
FREE WEBSITE AD


கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை மீட்கப்பட்ட நிலையில் அவரது தாய் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள பாடகி சின்மயி பிரபல யுடியூபரான பாண்டா பிரசாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை அருகேயுள்ள திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வெங்கடேஷ் - ரம்யா தம்பதியினரின் 7 மாத குழந்தையான கிரண்மாயி. கடந்த 28ஆம் தேதி காலை ரம்யா பால்கனி அருகே குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்.

பால்கனி அருகே சென்ற போது தாயின் கையிலிருந்து அந்த குழந்தை திடீரென அடுக்குமாடி பால்கனியிலிருந்து தவறி விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக தரையில் விழாமல் கூரை ஒன்றின் மேல் விழுந்த குழந்தை அங்கிருந்த புறாக்களை பார்த்துக் கொண்டே தத்தளித்தவாறு நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து அருகில் வசித்தோர் குழந்தை ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து கூச்சலிட்டனர். இதை அடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழந்தையை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக அவர்கள் அங்கிருந்த போர்வைகள் உள்ளிட்டவற்றை வலைபோல விரித்து கீழே விழாமல் பார்த்துக் கொண்டனர். குழந்தை மீட்பு: அதே நேரத்தில் அங்கிருந்த சிலர், கீழ் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக சென்று அந்த குழந்தையை மீட்டனர். குழந்தை மீட்கப்பட்டதும் அங்கிருந்த மக்கள் கைதட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

 ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்ததும் அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட வீடியோவும் ட்விட்டரில் வேகமாக பரவியது. தொடர்ந்து அந்த குழந்தை பயந்த நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களில் பெற்றோரின் கவனக்குறைவு காரணமாகத்தான் இது நடந்தது என விமர்சனம் எழுந்தது. பலரும் உங்களுக்கு ஏன் குழந்தை என நேரடியாகவே அந்த பெண்ணை விமர்சித்து வந்தனர்.

இதனால் சென்னையிலிருந்து கோவை சென்ற ரம்யா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தையை சரியாக கவனிக்கவில்லை என பலர் அவரை கேட்டதாகவும் மேலும் ட்விட்டரில் தன்னை குறித்த பதிவுகளை பார்த்த அவர் மன உளைச்சலில் இருந்த நிலையில் விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரம்யாவின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

 இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ரம்யாவை விமர்சித்தவர்கள் தான் குற்றவாளிகள் என பாடகி சின்மயி விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கும் சின்மயி, பிரபல யுடியூபரான பாண்டா பிரசாந்த் ரங்கசாமியின் எக்ஸ் பதிவை பகிர்ந்து," இவரைப் போன்ற நபர்கள் ஒரே ஒரு ட்வீட் மூலம் குழந்தையின் பெற்றோரை அவமானப்படுத்தினார்கள். இப்போது குழந்தையின் தாய் தனது உயிரை மாய்த்து கொண்டதால்.. இந்த மனித பிறவிகள் அனைத்தும் இப்போது கொண்டாடலாம்" என குறிப்பிட்டு இருக்கிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *