இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மதிய உணவு பாதி அவக்கடா பழம் மட்டுமே!

top-news
FREE WEBSITE AD

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தன் வாழ்நாளில் பெரும்பாலான ஆண்டுகளாக மதிய உணவைத் தவிர்த்து வந்தவர் என்பது மிகவும் சுவாரசியமான ஒரு செய்தியாகும்.

அவருக்கு மதிய உணவு என்பது ஆடம்பரமாகவே தோன்றியதால், அவர் மதிய உணவை மொத்தமாக புறக்கணித்து வந்தார். ஆனால் அவரின் புதிய மருத்துவ நிலைமைகள் இந்த பழக்கத்தை மாற்றி விட்டன.இந்நிலையில் சமீபத்தில் மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மருத்துவர்கள் மற்றும் ராணி கமீலா மன்னர் சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர். இதன் அடிப்படையில், அவர் முதன்முறையாக மதிய உணவை சாப்பிடத் துவங்கியுள்ளார்.  அவரின் மதிய உணவாக வெறும் பாதி அவக்கேடோ பழத்தை மட்டும் எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் சார்லஸின் உணவுப் பழக்கங்கள் பொதுவாகவே மிக எளிமையாக உள்ளன. காலை உணவாக அவர் பழங்கள், முட்டைகள், மற்றும் கார்ன் ஃப்ளேக் போன்ற எளிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வது வழக்கம். உலகில் பலருக்கும் உணவுப் பற்றாக்குறை இருக்கும் நிலையில், இவ்வளவு வசதியுள்ளவரின் எளிமையான உணவுப் பழக்கங்கள் ஆச்சர்யமாகவும், சிலருக்கு வேடிக்கையாகவும் தெரிகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *