கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சின் Tdap நோய்த்தடுப்பூசிகள்!

- Muthu Kumar
- 28 May, 2025
புத்ராஜெயா, மே 28:
28 முதல் 32 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு Tdap நோய்த்தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
tetanus, difteria, pertusis போன்ற நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் இந்த Tdap தடுப்பூசி, தாய்மார்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க நாடு முழுவதும் உள்ள அனைத்து KKM ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பகால பாதுகாப்பை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் கூறினார்.இந்த தடுப்பூசிகள், தாய் மற்றும் குழந்தைக்குப் பாதுகாப்பானது என்று அனைத்துலக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வகை தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படவில்லை என்றபோதிலும் குழந்தையின் பாதுகாப்பை முன்னிறுத்தி அதனை எடுத்துக் கொள்ள கர்ப்பிணிப் பெண்கள் ஊக்குவிக்கப்படுவதாக டாக்டர் சுல்கிஃப்ளி கூறினார்.
Kementerian Kesihatan menyediakan vaksin Tdap percuma untuk ibu mengandung 28 hingga 32 minggu bagi melindungi daripada tetanus, difteria, dan pertussis. Vaksin ini selamat dan bertujuan melindungi ibu serta bayi yang baru lahir.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *