தேவையான பொருட்களை முன்பே வாங்கி வைக்குமாறு நேட்டோ அமைப்பு அறிவுறுத்தல்!
- Muthu Kumar
- 21 Nov, 2024
உக்ரைன் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கி ஆயிரம் நாட்கள் ஆகின்றன.உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனின் அடிப்படை உள்கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் உக்ரைன் மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவை, நேட்டோ அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது . மேலும், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அணு ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.சமீபத்தில் உக்ரைனுக்கு நீண்ட இலக்குகளை குறிவைத்து தாக்கும் ஏவுகணையை அமெரிக்கா வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்த செயல் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் நேரடியாக மோதுவதற்கு சமம் என்றும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
என்னதான் அமெரிக்கா- உக்ரைனுக்கு ஏவுகணையை வழங்கினாலும் அதனை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறும் அமெரிக்காவை உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி வலியுறுத்தி வந்தார். தற்போது அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் நீண்ட இலக்குகளை குறி வைத்தும் தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு ஜோபைடன் அனுமதி அளித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதாவது அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா மீது எந்தவித தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு அணு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
நீண்ட தூர இலக்கை குறி வைத்து தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு உக்ரனுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததன் வெளிப்பாடாக ரஷ்யா அணு ஆயுத கொள்கையை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, உக்ரைனில் வாழும் மற்ற நாட்டு மக்களை நேட்டோ அமைப்பு பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது. மேலும், தங்களுக்கு தேவையான பொருட்களை முன்பே வாங்கி வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *