SMK திங்கி ஸ்தாப்பாக் பள்ளி விடுதியில் தீ! - உடனடி உதவிகள் வழங்க கல்வி அமைச்சர் உத்தரவு

- Shan Siva
- 29 Apr, 2025
கோலாலம்பூர்: SMK திங்கி ஸ்தாப்பாக்கின்
விடுதித் தொகுதிகளில் ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, உடனடி உதவி வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர்
ஃபத்லினா சிடெக் இன்று தெரிவித்தார்.
மாணவர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் பாதுகாப்பை
உறுதி செய்வதே தற்போதைய முன்னுரிமை என்று அவர் கூறினார்.
இந்தத் தீ
விபத்து குறித்து தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரின்
நலனைப் பாதுகாக்க உடனடி உதவி வழங்கப்படும் என்று அவர் ஒரு முகநூல்
பதிவில் தெரிவித்தார்.
நேற்று இரவு 8.43 மணிக்கு அப்பள்ளியில் உள்ள 91 ஆண் மாணவர்கள் தங்கும் விடுதித் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அவர்கள் அனைவரும்
தீ விபத்து ஏற்பட்டபோது பள்ளியின் சூராவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதியின் முதல் தளத்தை தீ சேதப்படுத்தியதில் 80 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
SMK Tinggi Stapak mengalami kebakaran di asrama lelaki, menyebabkan 80% kerosakan. Menteri Pendidikan, Fadhlina Sidek, beri jaminan bantuan segera dan utamakan keselamatan pelajar serta guru. Semua 91 pelajar yang terlibat dilaporkan selamat semasa kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *