ஈப்போ விரைவுப் பேருந்தில் தீ! மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

- Shan Siva
- 30 May, 2025
ஈப்போ, மே 30: கமுந்திங் அருகே வடக்கு-தெற்கு
விரைவுச்சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் KM 406 இல் நேற்று இரவு
நடந்த விபத்தைத் தொடர்ந்து, விரைவுப் பேருந்து
தீப்பிடித்து எரிந்ததில், அதிர்ஷ்டவசமாக அதில்
இருந்த இருபத்தெட்டு பயணிகளும், ஓட்டுநர்
ஒருவரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.
பேருந்து மோதி,
சறுக்கிய ஒரு மோட்டார் சைக்கிளை இழுத்துச்
சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
மோட்டார்
சைக்கிள் ஓட்டுநர் லேசான காயங்களுக்கு ஆளானார். அதே நேரத்தில் பயணிகளும்
ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இரவு 9.50 மணிக்குத் துறைக்கு ஒரு பேரிடர் அழைப்பு
வந்ததாகவும், கமுந்திங்
மற்றும் தைப்பிங் தீயணைப்பு நிலையங்களில் இருந்து குழுக்களை அனுப்பியதாகவும் பேராக்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர்
அகமது கூறினார்.
பேருந்து சுமார் 90% எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே 28 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்!
Kemalangan di KM 406 Lebuhraya Utara-Selatan dekat Kamunting menyebabkan sebuah bas ekspres terbakar selepas melanggar motosikal. Seramai 28 penumpang dan pemandu sempat menyelamatkan diri tanpa cedera. Bas musnah 90% akibat kebakaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *