சரியான திட்டமிடலுடன் அக்- 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு!
- Muthu Kumar
- 20 Oct, 2024
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தீவிர அரசியலில் களமிறங்க உள்ள அவர், தனது கட்சி 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்றும், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, திரைத்துறையில் இருந்து தான் விலக உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
தற்போது தனது 69-வது படத்தின் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27-ந் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு காவல்துறை இந்த மாநாட்டுக்காக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சி கொடியின் அர்த்தத்தையும், கட்சியின் கொள்கை குறித்தும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது கனமழை பெய்து வருவதால், அக்டோபர் 27-ந் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள். அப்போது மழை பெய்தால், அதற்கான முன்னேற்பாடுகள் என்ன செய்திருக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை.
வாகனங்கள் நிறுத்தும் இடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை. தொண்டர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை உடனடியாக உறுதி செய்து அதற்கான வரைபடங்களை ஒப்படைக்க வேண்டும். மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள், எந்த மாதிரியான வாகனங்கள் வரும் என்ற பட்டியலை முன்கூட்டிய காவல்துறைக்கு தர வேண்டும் என் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் கட்சியின் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதன்படி தற்போது விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் த.வெ.க மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாநாடு பகுதியில் 500-க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், வாகன பார்க்கிங் வசதிக்காக 4 இடங்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாநாடு நடக்கும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வசதி, பொருட்களோ அல்லது ஆட்களோ காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க மிஸ்ஸிங் சோன் வசதி செய்யப்பட்டுள்ளது.
மாநாடு நடக்கும்போது களத்தில் 150-க்கு மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பார்கள் என்றும், பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் தீயணைப்பு குழுங்களுக்கு தனி சீருடை வழங்கப்படும் என்றும், அனைத்து இடங்களிலும் கழிவறை, மாநாட்டை கண்கானிக்க தனிக்குழு, உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், 22-26ந் தேதி வரை திடலில் யாருக்கும் அனுமதி இல்லை என்றும், 27-ந் தேதி காலை முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *