பிரபல தமிழ் யூடியூபருக்கு திருப்பதி கோவில் தேவஸ்தானம் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

டிடிஎஃப் வாசன் மற்றும் அவருடைய நண்பர் அசீஸ் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் இருந்த இடத்திற்கு சென்று அவர்களை ஏமாற்றும் வகையில் வேடிக்கை செய்து காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளனர். திருப்பதியில் அதிகளவில் பக்தர்கள் தரிசனத்திற்காக வருவதால், கூட்டத்தை மேலாண்மை செய்யும் விதமாக அவர்களை சீராக தரிசனத்திற்கு அனுப்பும் வகையில் தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அறைகளில் காத்திருக்க வைக்கப்படுவார்கள். அந்த அறைகளை சிறிது நேரத்தில் பூட்டி வைக்கும் தேவஸ்தான ஊழியர்கள் சிறிது நேரத்துக்கு பிறகு திறந்து விடுவார்கள்.

இது போல ஒரு அறையில் காத்திருந்த பக்தர்களை பார்த்து, டிடிஎஃப் வாசன், இங்கிருக்கும் பக்தர்களிடம் நாம் அப்படி பண்ணலாம் என அஜீஸிடம் கூற அவரும் தேவஸ்தான ஊழியர் போல சென்று அறையை திறப்பது போல சென்று ஏமாற்றுகிறார். இதனை டிடிஎஃப் வாசன் காணொளியாக எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

ஏழுமலையானை வழிபட நமக்கு நேரம் வந்துவிட்டது என்ற ஆனந்த களிப்பில் பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என்று கோஷம் எழுப்புகின்றனர். அப்போது அவர்களை ஏமாற்றிய அசீஸ் அங்கிருந்து சிரித்துக் கொண்டே 'வர்டா மாமே டுர்ர்ர்..' என கூறியவாறு ஓடுகிறார். அருகில் இருக்கும் வாசன் வேண்டாம் டா என்கிறார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு திருப்பதி தேவஸ்தானம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாமி கும்பிடுவதற்காக காத்திருந்த பக்தர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் பிராங்க் செய்ததற்காக  டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளது.

இது போன்ற செயல்கள் வெறுக்கத்தக்கவை என்று கூறியுள்ள திருப்பதி தேவஸ்தானம் (TTD), இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததுடன், புனித திருமலையின் ஆன்மீக சூழலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறும்பு காணொளிகளை உருவாக்கவோ அல்லது இதுபோன்ற செயல்களில் ஈடுபடவோ வேண்டாம் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *