லீமா 25 கண்காட்சிக்கு மாமன்னர் வருகை புரிந்தார்!

top-news
FREE WEBSITE AD

லங்காவி, மே 22-

மசூரி அனைத்துலக கண்காட்சி மையத்தில் நடைபெறும் 2025ஆம் ஆண்டு லங்காவி அனைத்துலக விமானம் மற்றும் கடல்சார் கண்காட்சி, லீமா 25க்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வருகை புரிந்தார்.

நேற்று காலை மணி 10.15க்கு அங்கு வருகைப் புரிந்த அவரை, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டினும் இராணுவப் படைத் தளபதி டத்தோ முஹமட் நிசாம் ஜாப்பாரும் வரவேற்றனர். மாமன்னருடன் அவரது புதல்வர்களான, ஜொகூர் துங்கு தெமெங்கோங், துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார், ஜொகூர் துங்கு பங்ளிமா, துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் இளவரசரான துங்கு அபு பகார் ஆகியோரும் வருகைப் புரிந்திருந்தனர்.

மேலும், தற்காப்பு துணை அமைச்சர் எட்லி சஹாரிம், இராணுவ தரைப் படைத் தளபதி. ஜெனரல் டான்ஸ்ரீ முஹமட் ஹஃபிகடின் ஐந்தான், கடற்படை தளபதி லக்சமணா டத்தோ சுல்ஹெல்மி இத்னைன் மற்றும் ஆகாயப்படை தளபதி, ஜெனரல் டான்ஸ்ரீ முஹமட் அஷ்கார் கான் கொரிமான் கான் ஆகியோரும் வருகைப் புரிந்திருந்தனர்.

Sapura Secured Technologies SST, மலேசிய ஆகாயப்படை அரச மலேசிய கடற்படை மற்றும் துருக்கி தற்காப்பு அமைச்சின் தளங்களைப் பார்வையிட்டப் பின்னர் காலை மணி 11.00க்கு மாமன்னர் அங்கிருந்து புறப்பட்டார். தற்காப்பு அமைச்சு மற்றும் ஜி.இசி இணை ஏற்பாட்டில் மே 20ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதி வரையில், லீமா 25 சுண்காட்சி நடைபெறும்.

Yang di-Pertuan Agong Sultan Ibrahim menghadiri pameran LIMA 2025 di Langkawi semalam. Baginda diiringi kerabat diraja dan disambut oleh Menteri Pertahanan. Baginda melawat beberapa reruai termasuk dari Turkiye dan tentera Malaysia sebelum beredar jam 11 pagi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *