கட்சியைக் கலைத்துவிட்டு அம்னோவுக்குத் திரும்புங்கள்! - பெர்சாத்துவுக்கு அம்னோ தரப்பிலிருந்து கோரிக்கை

- Shan Siva
- 02 May, 2025
கோலாலம்பூர், மே 2: பாஸ் ஒற்றுமை அரசாங்கத்தில் சேர பல முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறி, பெர்சாத்துவை கலைத்து அம்னோவுக்குத் திரும்புமாறு Umno Veterans Club செயலாளர் முஸ்தபா யாகோப் பெர்சாத்து கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிமை கூட்டணியில் ஏற்றுக்கொள்ள பாஸ் முயற்சிப்பதை பெர்சாத்து கட்சி நன்கு அறிந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
பெர்சாத்து
மற்றும் அம்னோ இடையேயான ஒத்துழைப்பு பற்றிய பேச்சை நிராகரித்துள்ள முஸ்தபா, அதற்கு பதிலாக 1990களில் தெங்கு ரசாலி ஹம்சா செமாங்கட் 46 ஐ கலைத்து மீண்டும் அம்னோவில் இணைவதைப் போலவே முழுமையான மறு
ஒருங்கிணைப்புக்கு வலியுறுத்தினார்.
பாஸ் ஒற்றுமை
அரசாங்கத்தில் சேர அன்வாரை ஒரு முறை அல்ல, பல சந்தர்ப்பங்களில் தங்கள் இடைத்தரகர்கள் மூலம் வற்புறுத்தி வருகிறது என்பதை
பெர்சத்து அறிந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு முறை
மட்டுமல்ல, பல முறை பாஸ்
அன்வாரை சந்திக்க தங்கள் ‘பிரதிநிதிகளை’ அனுப்பியுள்ளது என்று அவர் கூறினார்.
பெர்சாத்து
பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுடின் ஒருநேர்காணலில், பொதுவான சித்தாந்த மதிப்புகள் காரணமாக அம்னோவுடன் இணைந்து
பணியாற்றத் தயாராகவே இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து முஸ்தபா இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று
முடிந்த ஆயர் கூனிங் இடைத்தேர்தலின் போது ஹம்சா இந்த நிலைப்பாட்டை மீண்டும்
வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார். குறைந்த
வாக்குப்பதிவு இருந்தபோதிலும் அம்னோ அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இது அம்னோவுடன் ஒத்துழைப்பது பற்றியது அல்ல, ஆனால் அம்னோவின் ஒரு பகுதியாக இருப்பது பற்றியது. எனவே ஹம்சாவின் தொடர்ச்சியான முயற்சிகள் நேர்மையானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் பார்க்கப்பட வேண்டும் முஸ்தபா கூறினார்!
Setiausaha Umno Veterans Club, Mustapa Yakob, menyeru Perikatan Nasional (PAS) kembali bergabung dengan UMNO, menolak kerjasama dengan PAS dalam kerajaan perpaduan, dan mencadangkan penyatuan penuh seperti yang berlaku pada 1990-an.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *