UK பாதுகாப்பாக உள்ளது!- மலேசிய மாணவர்களுக்கு இங்கிலாந்து தூதர் உறுதி!

- Shan Siva
- 08 Aug, 2024
கோலாலம்பூர், ஆகஸ்ட் 8: கடந்த
வாரம் முதல் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு
மத்தியில், மலேசிய மாணவர்கள்
படிப்பை மேற்கொள்வதற்கு இங்கிலாந்து பாதுகாப்பான இடமாக உள்ளது என்று பிரிட்டிஷ் தூதர்
ஐல்சா டெர்ரி தெரிவித்தார்.
இச்சம்பவங்கள் 'மனம் இல்லாத சிறுபான்மையினர்' கலவரக்காரர்களின் ஒரு சிறிய குழுவால்
நிகழ்த்தப்பட்டது என்றும்,
கலவரக்காரர்கள்
சட்டத்தின் முழு பலத்தையும் எதிர்கொள்வார்கள் என்பதை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
தெளிவாகக் கூறியிருந்தார் என்றும் அவர் கூறினார்.
இங்கிலாந்து பாதுகாப்பான இடமாக உள்ளது என்பதை மலேசிய
மாணவர்களுக்குத் தாம் உறுதியளிப்பதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *