மகன் திருமணத்தின் முதல் அழைப்பிதழைக் காசி விஸ்வநாதர் சன்னதியில் வைத்து வழிபட்ட நீதா அம்பானி!
- Muthu Kumar
- 26 Jun, 2024
இந்தியாவின் டாப் தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். அவர்களில் இருவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், அடுத்து இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையே ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி இன்று காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றார். தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். மேலும், தனது மகன் திருமணத்தின் முதல் அழைப்பிதழைக் காசி விஸ்வநாதர் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான திருமண ஏற்பாடுகளை அம்பானி குடும்பத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், தான் நீடா அம்பானி இன்று திடீரென காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றார். மேலும், அங்கு நடந்த , கங்கா ஆரத்தி நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.
பிங்க் நிற புடவை அணிந்த நீடா அம்பானி, திருமண பத்திரிக்கையை வைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நீடா அம்பானி, "நான் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தேன். இப்போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண அழைப்பிதழை விஸ்வநாதர் சன்னதியில் வைத்து வழிபடவே இங்கு வந்தேன்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இப்போது தான் இங்கு வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் இங்கு நடந்த வளர்ச்சிகள் மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், கங்கா ஆரத்தியின் போது நான் இங்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். கோயில் மிகவும் நன்றாக இருக்கிறது... இங்கே உள்ள தெய்வீக சக்தியை என்னால் உணர முடிகிறது" என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *