நீங்கள் பெற்று கொள்ளும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்- ஸ்டாலின்!

- Muthu Kumar
- 24 Feb, 2025
சென்னையில் உள்ள கொளத்தூரில் தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
"மணமக்கள் பெயரை பார்த்தால் எனக்கு கொஞ்சம் சங்கடமாக உள்ளது. தமிழ்ப்பெயர்களாக இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. பிறக்கும் குழந்தைளுக்கு அழகான தமிழ்ப்பெயர்களை சூட்டுங்கள் அதுதான் என் அன்பான வேண்டுகோள்.
குழந்தைகளை பெற்றுக் கொள்ள உடனடியாக அந்த காரியத்தில் இறங்கி விட வேண்டாம். பொறுத்து நிதானமாக, அளவோடு பெற்று வளமாக வாழ வேண்டும் என்பது தான் குடும்ப கட்டுப்பாடு பிரசாரம். அதை நாம் தொடர்ந்து கடைப்பிடித்த காரணத்தால் தான் தொகுதி மறுசீரமைப்பு வருகிறபோது எம்.பி., தொகுதி குறைக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
அப்படிப்பார்த்தால் நாம் அதிகம் பெற்றிருக்கலாம். நம்மை விட அதிகம் பெறக்கூடிய திறமை யாருக்கும் எந்த நாட்டுக்கும் எந்த மாநிலத்துக்கும் கிடையாது. ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள். அதனால் தான் மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்க முடியாது. இரு மொழிக்கொள்கை தான் வேண்டும் என்று சொல்லும் ஆற்றல் கொண்டிருக்கிறோம்.
5 ஆயிரம் அல்ல 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு கையெழுத்து போட மாட்டோம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறேன். பெற்றுக் கொள்ளும் குழந்தைக்கு அழகான தமிழ்ப்பெயர் சூட்டுங்கள் என்று பேசியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *