பினாங்கில் கள்ளச்சாராயம்! – RM123,931.02 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
- Sangeetha K Loganathan
- 11 Oct, 2024
பினாங்கில் SUNGAI JAWI பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் போலி மதுபானங்கள்
காய்ச்சு விநியோகிக்கப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பினாங்கு சுங்கத்துறையினர்
சோதனை நடத்தியதாக அதன் மாநிலத் தலைமை இயக்குநர் Datuk Roselan Ramli தெரிவித்தார்.
இச்சோதனையில் சம்மந்தபட்ட தோட்டத்தில் பணியாற்றிய இரு நேப்பால் நாட்டினர்கள் தப்பி ஓடியதாகவும், சுமார் 2,104.41 லிட்டர் அளவிலான 6,621 போத்தல்களில் வெளிநாட்டு மதுபான இலச்சிணையுடன் போலி மதுபானங்கள் கண்டெடுக்கப்பட்டதாக Datuk Roselan Ramli தெரிவித்தார். போலி மதுபானங்களுடன், அதைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார். சுயமாகக் காய்ச்சி விற்கப்படும் மதுபானங்களில் நச்சுத்தன்மை அதிகமாக இருக்கும் என்பதைப் பொது மக்கள் உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Jabatan Kastam Diraja Malaysia (JKDM) Pulau
Pinang telah menumpaskan sindiket pemprosesan dan pembekalan minuman keras
tiruan di Valdor pada 20 September, menemui 6,621 botol minuman keras dan
peralatan pemprosesan. Ahli sindiket, terdiri daripada warga Nepal, melarikan
diri semasa serbuan.Dalam operasi berasingan pada 2 Oktober, empat lelaki
ditahan bersama minuman keras tidak berkastam bernilai RM123,931.02.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *